ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடையத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
Published on

கடையம்:

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம், பாரத சாரணிய இயக்கம், சிறுவர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மீரா தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார். பேரணியை நாட்டு நலப்பணி மாவட்ட திட்ட அலுவலர் வைகுண்டசாமி, கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கடையம் ஒன்றிய கவுன்சிலரும், கடையம் வட்டார அரசு தொடக்கக்கல்வி குழு உறுப்பினருமான மாரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் வேலு, விக்னேஷ், கனிக்குமார் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com