வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்


வெயிலை சமாளிக்க போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட்
x
தினத்தந்தி 14 May 2025 2:10 PM IST (Updated: 14 May 2025 2:37 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கத்தை சற்று தமிழகத்தில் அதிகமாகவே உணரமுடிகிறது

சென்னை,

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை சற்று தமிழகத்தில் அதிகமாகவே உணரமுடிகிறது.

இந்த நிலையில், கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கிய ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தலா ரூ.15,000 மதிப்புகொண்ட இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story