திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்
Published on

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வுக்கு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் உதவி மையம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த உதவி மையம் வருகிற 30-ந்தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

எனவே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்கு உதவி மையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 93845 02744, 80569 25598 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டும் பேசலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com