ஹேமந்த் சோரன் கைது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டடார்.
ஹேமந்த் சோரன் கைது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பா.ஜ.க.வின் தந்திரங்களால் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்க முடியாது. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது கீழ்தரமான செயல்.

இந்த செயல் பா.ஜ.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தை தூண்டுகிறது. பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு, ஹேமந்த் சோரன் அடிபணியாமல் உறுதியாக இருக்கிறார்.

பா.ஜ.கவின் மிரட்டல்களை எதிர்த்து போராடும் ஹேமந்த் சோரனின் உறுதிப்பாடு உத்வேகம் தருகிறது"

இவ்வாறு அதில் பதிவிட்டிருந்தார்.

நேற்று ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com