சின்னத்திரை நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத் கைது- தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் டி.வி.நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத் கைது- தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் நடவடிக்கை
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் டி.வி.நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவு குறித்து போலீஸ் விசாரணை நடந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்தநிலையில், சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் 6 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணையை நடத்தினார். இந்த நிலையில், சித்ரா கணவர் கைது ஹேம்நாத் செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com