வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
Published on

கடலூர், 

நடப்பு (2022) ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர, தீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. சமூகத்தில் தானாக முன் வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த விருது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை என்ற முகவரிக்கு தபால் மூலமாக இருப்பின் 26.6.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் 30.6.2022 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விருது பெற கடலூர் மாவட்டத்திலுள்ள வீர, தீர செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com