படுகர் மக்களின் 'ஹெத்தை' அம்மன் திருவிழா - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கோப்புப்படம்
ஹெத்தை அம்மனின் அருளால் தீமை அழிந்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 'ஹெத்தை' அம்மன் திருவிழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.
"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு ஜெயலலிதா உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூரும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்... இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






