நீலகிரியில் களைகட்டிய ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரிய ஆடல் பாடலுடன் பக்தர்கள் உற்சாகம்!

பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, படுகர் இன மக்கள் தங்களது கலாச்சார நடனமாடியும், பாடல்களைப் பாடியும் அம்மனை வழிபட்டனர்.
நீலகிரியில் களைகட்டிய ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரிய ஆடல் பாடலுடன் பக்தர்கள் உற்சாகம்!
திருவிழா
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் முதன்மைக் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா பாரம்பரிய சடங்குகள் மற்றும் ஆடல் பாடல்களுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

ஹெத்தையம்மன் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஹெத்தையம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

பக்தர்கள் விரதம்- வழிபாடு

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த புகழ்பெற்ற திருவிழாவையொட்டி, படுகர் இன மக்கள் கடும் விரதம் இருந்து வருகின்றனர். விழாவின் தொடக்கமாக கடந்த 4-ம் தேதி அன்று கோத்தகிரி அருகே உள்ள பேரகணி, குன்னூர் அருகே உள்ள ஜெகதளா உள்ளிட்ட முக்கிய கிராமங்களில் உள்ள ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

பாரம்பரிய உடையுடன் ஆடல் பாடல்

திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, ஆண்களும் பெண்களும் தங்களது பாரம்பரிய வெண்ணிற உடைகளை அணிந்து கோவில்களில் திரண்டனர். பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, படுகர் இன மக்கள் தங்களது கலாச்சார நடனமாடியும், பாடல்களைப் பாடியும் அம்மனை வழிபட்டனர்.

தொடரும் கொண்டாட்டங்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட படுகர் கிராமங்களில், அந்தந்தப் பகுதி வழக்கப்படி அடுத்தடுத்த வாரங்களில் இந்த திருவிழா தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் திரளாகக் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

X