தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com