தாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர்மனைவியுடன் தலைமறைவு

காரிமங்கலம் அருகே தாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர் மனைவியுடன் தலைமறைவானார்.
தாய்- தந்தையை தாக்கிய கால்நடை டாக்டர்மனைவியுடன் தலைமறைவு
Published on

காரிமங்கலம்

காரிமங்கலத்தை அடுத்த பூனாத்தனஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்த சென்னகேசவன் (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி விஜயா (58). இவர்களது மகன் மாயக்கண்ணன் (35), கால்நடை டாக்டர். இவருடைய மனைவி மஞ்சுளா.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுளா, எண்ணெயை தரையில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த விஜயா, மருமகளிடம் அதுபற்றி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மாயக்கண்ணன், தன்னுடைய தாயையும், தந்தையையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சென்னகேசவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மனைவியுடன், கால்நடை டாக்டர் தலைமறைவாகி விட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com