

சென்னை,
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க.. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இவர், த.வெ.க.. வேட்பாளர் வி.செந்தில்குமாரை விட 2 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த கே.பிரகாசம் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "செந்தில்பாலாஜி தன்னுடைய சொத்துக் கள், குற்ற வழக்குகள் ஆகியவை குறித்து முழுமையாக வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.
பல தகவல்களை மறைத்துள்ளார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 81-வது பிரிவின்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்த மனுதாரர் பிரகா சம், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல. அந்த தொகுதி வாக்காளரும் அல்ல. எனவே, அவர் தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.