விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
Published on

மதுரை,

வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்து விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இன்று தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, கொரோனா தொற்று காலத்தில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு சரியானதே எனவும் அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com