பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு ...தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் கால விடுமுறை வழங்கு வது குறித்து முடிவு எடுப்பதுடன், கூலி வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை இருக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்தது.
ஐகோர்ட்
Published on

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் கால விடுமுறை வழங்கு வது குறித்து முடிவு எடுப்பதுடன், கூலி வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை இருக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்தது. மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த நர்மதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பல பெண்கள், கடுமையான மாதவிடாய் கால வலியால் அவதிப்படுகின்ற னர். அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, தமிழகத் தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் கொள்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

சாத்தியக்கூறுகள் ஆய்வு

பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் மாதவிடாய் கால விடுப்பு கொள்கையை உருவாக்குவது நலத்திட்ட நடவடிக்கைதான். எனவே தமிழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமை யான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கர்நாடகம், பீகார், கேரளம்

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்தி வேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், இந்த விவகாரத்தை பொறுத்தவரை கர்நாடகம், பீகார், கேரளம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே விடுமுறை உள்ளிட்ட வசதி கள் செய்யப்பட்டு உள்ளன. இதனை தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

பின்னர் நீதிபதிகள், தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே இப்போது மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாமே? இதில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மட்டுமல்லாமல் கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் உரிய முடிவு எடுக்கலாமே? என கேள்வி எழுப்பி, பரிந்துரையாகவும் தெரிவித்தனர். முடிவில், இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலாளர் வருகிற 28ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com