சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு வடமாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்
Published on

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. வடமாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர், சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்றுவிட்டு திரும்பி வந்திருந்தார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அவரது சூட்கேசுக்குள் செல்பி முறையில் வீடியோ எடுக்கக்கூடிய தானியங்கி புகைப்பட கருவி இருந்தது. மேலும் 8 பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகள் இருந்தது.

அவற்றை பிரித்து பார்த்தபோது ஹைட்ரோபோனிக் என்ற பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா 3 கிலோ மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com