

சென்னை,
தாய்லாந்து நாட்டில் இருந்த தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது பயணிகள் வருகையை சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்த போது 2 விமானங்களில் வந்த 2 பயணிகள், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
விசாரணையில் பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களின் உடமைகளை பரிசோதனை செய்ததில் சாக்லேட் வடிவத்திலும், உணவு பாக்கெட்டுகளிலும் மறைத்து கொண்டு வந்த உயர்ரக கஞ்சா கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான 9 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கஞ்