ஊட்டச்சத்து அதிகமாக உள்ளசெறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் வினியோகம்

ரேஷன் கடைகளில் வினியோகம்
ஊட்டச்சத்து அதிகமாக உள்ளசெறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் வினியோகம்
Published on

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பொதுமக்களுக்கு ரத்தசோகை மற்றும் நரம்பு சம்மந்தமான குறைபாடுகளை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் முக்கிய சத்துக்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இந்த அரிசியில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், தாதுக்கள், வைட்டமின் டி-12 உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும், ரத்தசோகையை தடுக்கிறது. கரு வளர்ச்சி, ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுகிறது", என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, மாவட்ட வழங்கல் அதிகாரி (பொறுப்பு) சிவக்குமரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பானுமதி, பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் கந்தசாமி, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com