சென்னை தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
Published on

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 17-வது சட்டசபை தேர்தல் நாளை (23-ந்தேதி) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்க நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் மிகத் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது

நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்கும் வகையில் உயர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் 1,50,128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்தும் ஒரே இடத்தில் கண்காணிக்க பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com