நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
Published on

விழுப்புரம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட கணக்கர் பழனி தலைமை தாங்கினார். செயலாளர் வீரப்பன், தலைவர் ராஜதுரை, சாலைப்பணியாளர் சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மதி, சதீஷ், ராஜலட்சுமி, சிவாச்சரண் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களுக்கு உடனே முதுநிலை பட்டியல் வெளியிட்டு முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும், சென்ற ஆண்டு கொரோனா காலத்தில் ஒரு சில கண்காணிப்பாளர்கள் இடையூறு செய்து மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்யப்பட்டதால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய மாவட்ட, கோட்டங்களிலேயே பணிபுரியும் வகையில் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com