சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கிருஷ்ணகிரியில் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நடைபயணம்
Published on

கிருஷ்ணகிரியில் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நடைபயணம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் பாதுகாப்பான உணவு மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு நடைபயண தொடக்க நிகழ்ச்சி நடந்து. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பங்கேற்று, பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி சென்றனர்.

இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கை சென்றடைந்தது. தொடர்ந்து பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) டாக்டர் வெங்கடேசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் ஜெயந்தி, தாசில்தார் நீலமேகன், பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாய்ப்பால் வாரவிழா

தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழாவை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com