மலை ரெயில் ரத்து: குன்னூரில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்

நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மலை ரெயில் ரத்து: குன்னூரில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
Published on

குன்னூர்,

பெஞ்ஜல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி-குன்னூர் மற்றும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நாளை (புதன்கிழமை) வரையும், ஊட்டி-குன்னூர் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) வரையும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மலை ரெயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள தண்டவாளத்தில் பழைய மரக்கட்டைகளை அகற்றி புதிய கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com