கிளாட் தேர்வில் மலைவாழ் மாணவர் முதலிடம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

மாணவர் பரத்தின் சட்டப் படிப்புக்கு தி.மு.க. சட்டத்துறை துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிளாட் தேர்வில் மலைவாழ் மாணவர் முதலிடம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
Published on

திருச்சி பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத். இவர் பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பச்சமலைப் பகுதியில் கிளாட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை பரத் படைத்துள்ளார்.

இந்த நிலையில் கிளாட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவர் பரத்துக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவரது சட்டப் படிப்புக்கு தி.மு.க. சட்டத்துறையும், அதன் செயலாளர் என்.ஆர். இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com