வானொலியில் இந்தி தாக்கம்; தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் - கவிஞர் வைரமுத்து டுவீட்

இந்தி அகலாவிடில் அல்லது குறையாவிடில் தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
வானொலியில் இந்தி தாக்கம்; தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் - கவிஞர் வைரமுத்து டுவீட்
Published on

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அகில இந்திய வானொலியின்

தமிழ் நிலையங்கள்

பல கலைஞர்கள்

தமிழ் விளைத்த கழனிகளாகும்;

கலைக்கும் அறிவுக்குமான

ஒலி நூலகங்களாகும்

அங்கே தமிழ் மொழி

நிகழ்ச்சிகள் குறைந்து

இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது

மீன்கள் துள்ளிய குளத்தில்

பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்

கண்டிக்கிறோம்

இந்தி அகலாவிடில்

அல்லது குறையாவிடில்

தமிழ் உணர்வாளர்கள்

வானொலி வாசலில்

களமிறங்குவோம்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com