இந்து முன்னணியினர் சாலை மறியல்; 13 பேர் கைது

இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து முன்னணியினர் சாலை மறியல்; 13 பேர் கைது
Published on

ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலூரில் பழைய பஸ் நிலையத்தில் காந்தி சிலை அருகே இந்து முன்னணியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமைலில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் நகர தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் செல்வக்குமார், திருச்சி கோட்டத் தலைவர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், வி.களத்தூர் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து, ஆத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com