நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் கைது

பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர் .
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் கைது
Published on

நெல்லை,

நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் , பெட்ரேல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் . திரையரங்கில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்வதற்காக, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார், தலைமையிலான பேலீசார் இந்து முன்னணியினரை கைது செய்தனர். பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக பேலீசார் விளக்கமளித்துள்ளனர் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com