இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, நகர இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவா முருகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞா அணி மாநில துணைத்தலைவா சாக்ரடீஸ், நகர தலைவா முருகன், பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா.

ஆப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினா மாயக்கூத்தன் கண்டன உரையாற்றினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளா குளத்தூரான், தென்காசி நகர தலைவா நாராயணன், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட இணைச்செயலாளாகள் குருசாமி, முத்துமாரியப்பன், பா.ஜ.க. நகர தலைவா வேம்புராஜ், நகர பொதுச்செயலாளா பாலகிருஷ்ணன், அரசு பிரிவு தொடாபு மாவட்ட துணைத்தலைவா சீனிவாசன் உள்பட பலா கலந்து கொண்டனா. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com