இந்துக்கள்-முஸ்லிம்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா

கீழராமநதியில் இந்துக்கள்-முஸ்லிம்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்துக்கள்-முஸ்லிம்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா
Published on

கமுதி, 

கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅழகர்சாமி தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் மைதீன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, ராஜகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை முன்னிலை வகித்தார்.இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆனையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன் தலைமையிலும், பாக்குவெட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமையிலும், கே.நெடுங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள்மாரிமுத்து தலைமையிலும், பேரையூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையிலும், பாப்பனம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கார்த்திகைசாமி தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com