இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது பதியப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com