தமிழக பட்ஜெட்: இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள புராதான கோவில்களை சீரமைக்க ரூ.100 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்: இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு. அந்த நிதியில் ரூ.100 கோடி தமிழகத்தில் உள்ள புராதான கோவில்களை சீரமக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 சிறப்பு நிதி ஒதுக்கீடு

வட்டியில்லா பயிர் கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிதாக தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்

சிங்காரச்சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழிலில் உருவாக்க மையம் அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு

தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க ரூ.1,000 கோடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com