பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: பண்ருட்டி ராமசந்திரன்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: பண்ருட்டி ராமசந்திரன்
Published on

சென்னை,

சென்னையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் அமைச்சர் வேட்பாளர் விவகாரமே பாஜக- அதிமுக கூட்டணி பிளவுக்கு காரணம். அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதால் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. கடந்த தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த எதிர்ப்பு தெரிவித்தேன்.

தலைவர்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நம்பகத்தன்மை உள்ளவர் ஓ பன்னீர் செல்வம் தான்.பாஜக என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து முடிவு எடுப்போம். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com