

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தனது அயராத உழைப்பால் பதிவு செய்திருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்குச் சான்றாகக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் வலுவான அடித்தளமாக அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.