வரலாறு மீண்டு திரும்பும்.. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: கனிமொழி எம்.பி.

தி.மு.க. கூட்டணி நிச்சயம் சிறப்பான ஒரு வெற்றியை பெறும் என கனிமொழி எம்.பி. கூறினார்.
வரலாறு மீண்டு திரும்பும்.. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: கனிமொழி எம்.பி.
Published on

சென்னை,

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான கனிமொழி எம்.பி., சென்னை மயிலாப்பூ ரில் சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப் போட்டார். வாக்களித்து வெளியே வந்த பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நிச்சயமாக ஒரு தெளிவான முடிவை எடுப்பார்கள். நான் மக்களை தொடர்ந்து சந்தித்ததன் அடிப்படையில் சொல்கி றேன், உறுதியாக தி.மு.க. ஆட்சி தொடரும் என்று மிகவும் நம் புகிறேன். நான் இத்தனை தொகுதிகள் நிச்சயமாக வெல்வோம் என்ற எண்ணிக்கைக்குள் போக விரும்பவில்லை. ஆனால் தி.மு.க. கூட்டணி நிச்சயம் சிறப்பான ஒரு வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், த.வெ.க. தலைவர் விஜய்யின் பின்னால் பெரும்பா லான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'வாக்கு எண்ணும் நாளில் இதன் உண்மை என்ன? என்பது நம் அனைவருக்கும் தெரியவரும்' என்றும், மேலும், 1971-க்கு பிறகு தி.மு.க. தொடர்ந்து 2-வது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என்று சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு, 'நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்.” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com