மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி

தஞ்சையில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் 27 அணிகள் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
Published on

தஞ்சையில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதில் 27 அணிகள் பங்கேற்றனர்.

ஆக்கி போட்டி

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. போட்டியானது 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனி தனியாக நடத்தப்பட்டது.

முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு மட்டும் ஆக்கி போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, உடற்கல்வி இயக்குனர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 9 அணிகள் வீதம் 3 பிரிவுகளிலும் 27 அணிகள் கலந்து கொண்டன.

இன்று மாணவிகளுக்கு...

இன்று (புதன்கிழமை) மாணவிகளுக்கான ஆக்கி போட்டி நடக்கிறது. போட்டிகளில் 3 பிரிவின் கீழ் முதல் இடங்களை பிடிக்கும் தலா 3 மாணவர்கள் அணியும், மாணவிகள் அணியும் மாநில அளவில் நடைபெறும் ஆக்கி போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் சேகர், ஆக்கி பயிற்சியாளர் அன்பழகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com