ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
Published on

பென்னாகரம்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை எனக்கூறி அம்மாநில அரசு அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது.

இதனால் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3 ஆயிரத்து 179 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில்மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com