ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
Published on

பென்னாகரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனினும் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com