ஹோலி பண்டிகை- அன்புமணி இராமதாஸ் வாழ்த்து
சென்னை
ஹோலி திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வண்ணங்களின் திருநாளாகவும், வசந்தத்தின் அடையாளமாகவும் கருதப்படும் ஹோலி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஹோலி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹோலி திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான். வசந்தகாலத்தின் தொடக்கத்தில் வரும் முழுநிலவு நாளில் தான் ஹோலி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஹோலியை கொண்டாடுவதில்லை என்றாலும் அது கொடுக்கும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் இதுவரை அனுபவித்து வந்த கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டப்பட்டு, இனி வரும் காலம் தமிழக மக்களுக்கு வண்ணமயமாக அமைய ஹோலி வகை செய்யட்டும்.
உலகில் அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி, நல்லிணக்கம், சகோதரத்துவம், வளம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க ஹோலி வகை செய்ய வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

