கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 21-ந்தேதி விடுமுறை அறிவிப்பு


கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு  21-ந்தேதி விடுமுறை அறிவிப்பு
x

22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர். மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும். அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூமார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story