விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

விஷேச நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வரு கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்த நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதியது. ராஜகோபுரம் வழியாக சென்ற பொது தரிசனம் வரிசையானது கோவிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவரை நீண்டு காணப்பட்டது.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பொது தரிசனம் வழியில் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஒருசில பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் இலவச பிரசாத லட்டு, தொடர்ந்து வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com