விடுமுறை நாள், சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
விடுமுறை நாள், சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தின நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். மேலும் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் இன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். எனினும் வழக்கத்தை விட சற்று குறைவான பக்தர்களே கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான அய்யப்ப பக்தர்களும் வருகை தந்து கட்டணம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com