செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 16, 26-ந்தேதி விடுமுறை - கலெக்டர் தகவல்

திருவள்ளுவர், குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 16, 26-ந்தேதி விடுமுறை - கலெக்டர் தகவல்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிம நிறுவனங்களுக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ந்தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் உலர்நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த இரு தினங்கள் மதுக்கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் கடைகள் மதுபான கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com