ராமலிங்கனார் நினைவு நாளையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ராமலிங்கனார் நினைவு நாளையொட்டி 5-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமலிங்கனார் நினைவு நாளையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன், அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவற்றை 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளன்று மூட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு விற்பனையின்றி மூடி வைக்கப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com