

சென்னை,
காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.
வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானதால், சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகமாக இருந்ததால், மற்ற மீன்களின் விலை சற்று குறைவாகவே காணப்பட்டது.