விடுமுறை தினம்: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விடுமுறை தினம்: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
Published on

தென்காசி,

குற்றால அருவி

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய் தது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது.

குற்றாலத்தில் பிரதான அருவியான மெயின் அருவியில் கடந்த 3 மாதங்களாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த பழமை வாய்ந்த பிரமாண்ட வளைவு இடித்து அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக மலையில் இருந்து சற்று இடைவெளி அதிகரித்து, அதிக சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் வகையில் பிரமாண்ட வளைவு புதிதாக கட்டப்பட் டது.

களைகட்டிய சீசன்

இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், குற்றாலத்தில் சீசன் களைகட்டியது. இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முதல் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது சீசன் களைகட்டிய நிலையில் மெயின் அருவியில் குளிக்க அனுமதித்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் முழுமையாக அமைக்கப்படாததால், ஆங்காங்கே மண்மூட்டை களை அடுக்கி வைத்துள்ளனர். பெண்கள் உடைமாற்றும் அறை பணிகளும் நிறைவுபெறவில்லை. எனவே, பெண்கள் உடைமாற்றுவதற்கு தற்காலிக அறை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com