நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆட்சியர் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார்.
நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on

நீலகிரி,

நீலகிரியில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை பொழிவு அதிகமுள்ள 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்து உள்ளார்.

இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலில் கனமழையால் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை நாளை விடுமுறை அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com