தூய மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி

தூய மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி நடந்தது.
தூய மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி
Published on

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி திருவிழா திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை தேவகோட்டை ஆனந்தா கல்லூரி செயலர் அருட்தந்தை செபஸ்தியான் தலைமையில், ஆண்டாவூரணி பங்கு தந்தை அந்தோணி மிக்கேல், உதவி பங்கு தந்தை டேனியல் திலீபன் மற்றும் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித மிக்கேல் அதிதூதர், புனித சந்தியாகப்பர், ஆரோக்கிய மாதா கிராம வீதிகளில் பவனி வந்தனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com