புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி

புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.
புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி
Published on

இலுப்பூரில் புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 33-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்கு தந்தைகள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தொடர்ந்து இலுப்பூர் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் மற்றும் இணை பங்குத்தந்தை இருவரும் இணைந்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். பின்னர் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் ஊரின் முக்கிய பகுதிகளின் வழியாக பவனி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதிகளில் உள்ள குடும்பத்தினரும் தங்கள் வீடு அருகே தேர் வலம் வரும் பொழுது மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை, சாம்பிராணி ஆகியவற்றை காண்பித்து புனித வியாகுல அன்னையை பிரார்த்தித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com