தியாகி சங்கரலிங்கனார் உருவப்படத்துக்கு மரியாதை

பாளையங்கோட்டையில் தியாகி சங்கரலிங்கனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தியாகி சங்கரலிங்கனார் உருவப்படத்துக்கு மரியாதை
Published on

மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் தாயக நிலப்பரப்பை ''தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைத்து வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 67-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் சங்கரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ் சான்றோர் பேரவை மாநகர தலைவர் சுதர்சன், தமிழ்த்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, நாம் தமிழர் கட்சி ராஜசேகர், சமூக ஆர்வலர் புல்லட் ராஜா, மாவீரர் சுந்தரலிங்கம் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல்ஜபார், வர்த்தக காங்கிரஸ் சேவியர், இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு பீட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மாவட்ட தலைநகரங்களில் சங்கரலிங்கனார் முழு உருவ சிலைகள் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com