பெருந்துறை செவிலியர் வழக்கில் நேர்மையான விசாரணை தேவை: கனிமொழி வலியுறுத்தல்

பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கனிமொழி
Published on: 

சென்னை,

பெருந்துறை செவிலியர் வழக்கில் நேர்மையான விசாரணை தேவை என திமுக பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

காவல்துறை அலட்சியம்

பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com