தேனி, ஆண்டிப்பட்டியில்இன்று, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி, ஆண்டிப்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை பார்க்கலாம்.
தேனி, ஆண்டிப்பட்டியில்இன்று, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
Published on

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையாட்டி, தேனி கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜி நகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையாட்டி, ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com