குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
Published on

வீரமாகாளியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தினமும் அம்பாளுக்கு, அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் மண்டகப் படிதாரர்கள் சார்பில் நடைபெற்று வருகின்றது. எட்டாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு மாஞ்சான்விடுதி கொத்தக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் சார்பில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

பந்தயத்தில் திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் திருவரங்குளம் வழியாக பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி, நடுமாடு வண்டி, கரிச்சான் மாட்டுவண்டி மற்றும் பெரிய குதிரை, சிறிய குதிரை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

பரிசு

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகளும், சாரதிக்கு கொடி பரிசும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாஞ்சன் விடுதி, கொத்தக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள், விழா குழுவினர், மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com