சென்னையில் கிளாண்டர்ஸ் நோயால் குதிரை சாவு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தான நோய் "கிளாண்டர்ஸ்" தொற்று என மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் கிளாண்டர்ஸ் நோயால் குதிரை சாவு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
Published on

சென்னை,

சென்னையில் பொதுமக்கள் சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் எனப்படும் ஆபத்தான தொற்று நோயால் உயிரிழந்த நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மத்திய அரசின் ஆய்வு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது. இதன்படி குதிரைகள் பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தான நோய் "கிளாண்டர்ஸ்" தொற்று என மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com